WhatsApp Image 2023 06 21 at 03.50.35

உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல்   நிகழ்ச்சி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில்  நடைமுறைப்படுத்துதல்   தொடர்பான  கலந்துரையாடல் 21.06.2023 அன்று  இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதி நிதிகளுக்கும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில்  செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2023 06 21 at 00.44.41

மட்டக்களப்பு மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் இரண்டாம் காலான்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 21.06.2023 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 06 19 at 04.20.40

மட்டக்களப்பு மாவட்டத்தில் Save the Children நிறுவனத்தின் மனிதாபிமான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இச் செயற்றிட்டம் தொடர்பாக  19.06.2023 அன்று மாவட்ட செயலக  மாநாட்டு மண்பத்தில்  உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்  அவர்களின் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2023 06 20 at 23.52.05 1

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி விழிப்பூட்டல் நிகழ்வொன்று மாவட்ட செயலகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ் யோகா பயிற்சி ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் 21.06.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 06 19 at 03.01.48

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமதொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.