WhatsApp Image 2023 07 16 at 15.23.42

பல்துறை ஆளுமையாளர்களை கௌரவிக்கும் "நாதம் விருது" வழங்கல் விழா 16.07.2023 அன்று மட்டக்களப்பில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றது. BATTI NAATHAM பிரதம ஆசிரியர் தர்மலிங்கம் தயாபரன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாத வானந்தா ஜீ, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு பெரிய பள்ளிவாசல் மௌலவி நியாஸ், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி. பாரதி கென்னடி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

WhatsApp Image 2023 07 06 at 23.58.08

மட்டக்களப்பில் டெங்கு பரவலினைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்களில்  சிரமதான நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தினைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் 07.07.2023 அன்று  ஈடுபட்டனர்.

WhatsApp Image 2023 07 06 at 00.03.20

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் 06.07.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 07 06 at 03.20.08

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் சுற்றாடல்  பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் சிரமதானங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. அதற்கிணங்க மாவட்ட செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு கே.மதிவண்ணன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் 06.07.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 07 04 at 02.02.16 1

ஒரு இலட்சம் வேலை வழங்கும் அரச கொள்கைத்திட்டத்தின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு அரச அலுவலங்களில் பயிலுனர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு மட்டக்களப்பில் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.