WhatsApp Image 2023 06 18 at 23.42.55

அறநெறிப் பாடசாலைகளில் ஒரு கைபிடி அரிசி சேகரித்து பிறர் உயிர்வாழ உதவும்  செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கமைவாக மாவட்டத்திலுள்ள அனைத்து அறநெறிப் பாடசாலைகளிலும்  இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp Image 2023 06 16 at 04.05.43

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இதனைக்  கட்டுப்படுத்த கிழக்கு மாகாண ஆளுனரினால் அண்மையில் விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. இச்செயலணியின் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் 16.06.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 06 13 at 4.00.35 PM

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி திரு  வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் 13.06.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 06 14 at 01.51.06

விவசாய அமைச்சினால்   நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான  மீளாய்வு கலந்துரையாடல், கிராமிய பொருளாதார இராஜாங்க  அமைச்சரும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்கள் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.06.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 06 08 at 03.34.47 1

மட்டக்களப்பு  மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவட்ட சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு உதவி மாவட்ட செயலாளர் திரு ஆ.நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.06.2023 அன்று இடம் பெற்றது.