WhatsApp Image 2023 02 09 at 01.50.59

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி பயனாளிகளுக்கு வருடாந்தம் பல்வேறு விதமான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இதற்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி சௌபாக்கியா பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆறு லட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபாவை நன்கொடையாக வழங்க மீதித்தொகையை சமுர்த்தி பயனாளி இடுவதன் மூலம் இவ்வீட்டினை அமைத்துக் கொள்ள முடியும். இத்துடன் இவ்வீட்டை மேலதிகமாக வடிவமைத்துக்கொள்ள கிராமத்தில் உள்ள நலனுதவியாளர்களின் நன்மையை பெற்றும் அமைத்துக் கொள்ளவும் முடியும்.

WhatsApp Image 2023 02 07 at 23.36.12 1

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் உலக உணவுத் திட்ட அவசரநிலை இணைப்பாளர் ஜோஸ்பன்ட் முஸோங்காவுடன் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில்   08.02.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 02 05 at 23.41.56

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும்  மனிதவள அபிவிருத்தி  உத்தியோகத்தர்களின் கொள்திறனை அபிவிருத்தி  செய்வதற்கான  இரு நாள் பயிற்சி பாசறை 06.02.2023 அன்று மட்டக்களப்பில் உள்ள தொழில் வழிகாட்டல் நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 02 08 at 23.23.41

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு  பிரதேச செயலகத்தினால்  "புதிய நாடு புதிய கிராமம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர்  எஸ் . சுதாகர்  தலைமையில் 08.02.2023 அன்று கரவெட்டி மைதானத்தில் இடம் பெற்றது. இதன் போது பொதுச்சந்தை திறந்து வைப்பு, அதனுடன்  வாழ்வாதார உதவியாக கோழி குஞ்சு மற்றும் மரவள்ளி தடி , மரக்கன்றுகள்  மற்றும்  உலர் உணவு பொதிகள் பயனாளிகளுக்கு  வழங்கப்பட்டன.

IMG 20230204 WA0042

இலங்கை  ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மட்டகளப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 04.02.2023 அன்று வெபர் மைதானத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.