WhatsApp Image 2023 01 10 at 02.08.32

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 10.01.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 01 09 at 03.28.49 1

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள்   ஆணையாளர் மற்றும் அலுவலர்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையிலான   கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. நவரூப ரஞ்சினி முகுந்தன் அவர்களின் வழிகாட்டுதலில்  உதவித் தேர்தல்கள்  ஆணையாளர் எம்.பி.எம். சுபியான்  தலைமையில் மாவட்ட செயலகத்தில் 09.01.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 01 01 at 22.56.32 1 Copy

மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  அவர்களின் தலைமையில் 02.01.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 01 05 at 01.45.05

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் "Smart Secretariat" எண்ணக்கருவிலான இணையத்தள சேவையை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நிகழ்வு 05.01.2023 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறி மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் திரு ஆறுமுகம் நவேஷ்வரன் அவர்களின் தலைமையிலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி லக்சிகா கதீசன் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

06 800x533

மட்டக்களப்பு  மாவட்ட. அரசாங்க அதிபராக கடந்த 2020 செப்டம்பர் மாதம் முதல் 2022.12.31 வரை கடமையாற்றி வந்த திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.