WhatsApp Image 2022 12 21 at 10.19.26 2

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் அவர்கள் தலைமையில்  மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி     ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் டேபா  மாநாட்டு மண்டபத்தில் 21.12.2022  இடம் பெற்றது. அதிதிகளினால் மங்கள ஒளிவிளக்கு ஏற்றப்பட்டு இந் நிகழ்வு ஆரம்பமாகியது.

WhatsApp Image 2022 12 10 at 03.31.58

உள்ளகக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் ஊழியர்களுக்கான நான்குநாள் பயிற்சிச் செயலமர்வு  மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

WhatsApp Image 2022 12 08 at 23.23.26

போரதீவு பிரதேச  செயலக பிரிவில் சிறுதொழில் முயற்சியில் ஈடுபடும்  முயற்சியாளர்களுக்கு சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில்  சந்தைப்படுத்தல் தொடர்பான முகாமைத்துவ  செயலமர்வு பெரிய போரதீவு  கைப்பணி உற்பத்தி  சங்க நிலையத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 12 09 at 02.49.57

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் இரண்டாம் மொழி பயிற்சிநெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவருகின்றன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீதி மன்ற உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சிநெறி 09.12.2022 அன்று மாநகரசபை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 11 28 at 03.47.57 1

சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியில் மாணவர்களுக்கான பயிற்சி பாசறை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட உளவள அதிகாரி ஜனார்தனி நரசிம்மன்  தலைமையில் 28.11.2022 அன்று  இடம்பெற்றது.