- Details
- 27views

அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கிடையில் அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமாகி இறுதிச் சுற்று 27 ம் திகதி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
- Details
- 21views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச பிரிவுகளுக்கிடையில் அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி-2022 23.11.2022 அன்று மட்டக்களப்பில் ஆரம்பமாகியது.
- Details
- 13views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு உலக வங்கியின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக மாவட்டத்தில் உள்ள 260 முன்பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டி (Water Filters) வழங்கிவைக்கப்பட்டது.
- Details
- 12views

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இந்து கலாசார பிரிவின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) மற்றும் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இந்து சமய தலைவர்களான ஆலய நிர்வாகிகள், இந்துசமய நிறுவன தலைவர்கள், இந்துசமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கான சமயங்களினூடான “சமூக அக்கறையும், அதனூடான சேவையும்” எனும் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன் தலைமையில் 26.11.2022 ம் திகதி சனிக்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 9.00 மணிதொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற்றது.
- Details
- 17views

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய இரசாயன விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கான விசேட தெளிவூட்டல் செயலமர்வொன்று 09.11.2022 ம் திகதி மட்டடக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.





