- Details
- 33views

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடத்திய எழுத்தாற்றல் மேம்பாட்டு கூடல் 10.09.2022 அன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
- Details
- 18views

போதையற்ற நாடு - சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுசபையின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரன் அவர்கள் தலைமையில் 05.09.2022 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 18views

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் 05.09.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
- Details
- 24views

47 வது தேசிய மட்ட விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 66 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சம்பியனாக தெரிவாகியுள்ளது.
- Details
- 14views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இலத்திரனியல் பத்திரிகை ஒன்று 01.09.2022 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களால் 01.09.2022 ஆம் திகதி வியாழக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இப்பத்திரிகை உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.





