WhatsApp Image 2022 08 24 at 3.21.09 AM

வாழ்வின் சக்தி செயற்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 24.08.2022 ஆம் திகதி  உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களை இனங்கண்டு அவர்களுக்கான அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதே வாழ்வின் சக்தி செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

WhatsApp Image 2022 08 23 at 12.11.43 AM

மட்டக்களப்பின் வடக்கில் அமைந்துள்ள சவுக்கடி கிராமம் பல்வேறு விதங்களில் நலிவுற்றதாய் காணப்படும் ஓர் சமூகத்தின் நெடுங்கால வாழ்விடமாகும். போசாக்கு குறைந்த பிள்ளைகள் மற்றும்  கர்ப்பிணி பெண்கள் மத்தியில் சாதாரணமாக காணப்படும் நிலையில் வளங்கள் சூறையாடப்படுவது பெரியதோர் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இவற்றோடிணைந்த பல காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இக்கிராமத்தினை கிழக்குப்பல்கலைக்கழகம் தத்தெடுத்தது ஓர் மாதிரிக்கிரமமாக அபிவிருத்திசெய்ய திட்டமிட்டுள்ளநிலையில் அதன் முதல் அங்கமாக ஒன்றிணைந்த  மருத்துவ முகாம் மற்றும்  தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றுள்ளது.

WhatsApp Image 2022 08 19 at 11.54.08 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றிவரும் அரச அலுவலர்களுக்கான அரசியல் யாப்பு திருத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முழுநாள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை 20 ஆம்  திகதி கல்லடி கிரீன் காடன் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 08 20 at 9.45.17 AM

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சத்துமா வழங்கும் திட்டம் 20 ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்களின்  பங்குபற்றலுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 08 17 at 10.51.51 AM

மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில் "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 6 வது தடவையாக மேற்கொள்ளப்படும் இரத்ததான முகாம் 17.08.2022 ஆம் திகதி புதன்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.