- Details
- 11views

உணவு உற்பத்திக்கான தேசிய போராட்டம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட சிறுபோக நெல் அறுவடையின் ஒருபகுதியினை இம்மாவட்ட மக்களின் பாவனைக்கு முழுமையாக பயன்படுத்த மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- Details
- 12views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அலுவலக உத்தியோகத்தர்களால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்களின் தலைமையில் 06.06.2022 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மரணமடைந்த அமரர் செ. ஜெயகாந்தன் குரூஸ் என்பரின் ஓராண்டு நினைவினை முன்னிட்டு மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினால் இவ்விரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- Details
- 22views
மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் நிர்மானிக்கப்பட்ட அலுமினிய தொழிற்சாலையொன்று 05.06.2022 ஆம் திகதி மாலை திறந்து வைக்கப்பட்டது. அல்றா அலுமினியம் உற்பத்திசாலையின் தவிசாளர் ஏ.எம்.உனைஸ் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த தொழிற்சாலையினை திறந்து வைத்துள்ளார்.
- Details
- 16views

இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் 03.06.2022 திகதி மட்டக்களப்பை வந்தடைந்தது. கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த்இ புகையிரத நிலைய பிரதம அதிபர் எஸ்.பேரின்பராசா உட்பட அதிகாரிகள் பலரும் சமுகமளித்திருந்தனர்.





