- Details
- 6views

கடந்தகால யுத்தத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட படுவாங்கரைப்பிரதேசத்தில் பட்டிப்பளையும் முக்கியமானது. அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார தேவையை ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சேவைக்கு சமன்செய்யும் முகமாக உலகவங்கியின் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலையில் நவீன ஆய்வுகூட, மருந்தகத்தைக் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் க. கருணாகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் மக்களின் பாவனைக்கு வழங்கிவைக்கப்பட்டது.
- Details
- 15views

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியானது வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
- Details
- 15views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் (Qi zhenhong) மட்டக்களப்பு மாவட்டத்தில் 26.05.2022 ஆம் திகதி இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
- Details
- 10views

மட்டக்களப்பில் புதிதாக திராய்மடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் அறிவுரைக்கு அமைய 25.05.2022 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சகல திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதான பணியினை மேற்கொண்டு குறித்த வளாகத்தினை டெங்கு நுளம்பு உற்பத்தியாகா வண்ணம் சிரமதானப் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
- Details
- 23views

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பலையடிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் கண்ணபுரம் கிராமத்தினை விவசாய மாதிரி கிராமமாக செயற்படுத்த கிழக்கு மாகாண ஆளுனரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாய உள்ளிட்டு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.





