- Details
- 7views
மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 52 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகம் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
- Details
- 11views
விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 52 வது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்படும் உதைபந்தாட்ட சமர் இம்மாதம் 6, 7, 8 ஆந்திகதிகளில் விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
- Details
- 12views

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச செலவினங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் 29.04.2022 அன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
- Details
- 12views

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களின் “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.
- Details
- 10views

மட்டக்களப்பில் கொய்க்கா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் இயற்கை விவசாய செயற்திட்டம் வெற்றியளித்துள்ளது. கொரியநாட்டின் அனுசரணையுடன் இயற்கை முறையில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் திட்டம் மட்டக்களப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஏப்ரல் மாதம் இறுதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினை மேலும் 18 மாதங்களுக்கு மீள நீடித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே. கருணாகரன் அவர்கள் தலைமையில் 27.04.2022 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.





