WhatsApp Image 2023 01 17 at 21.53.04

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தமது கடைமைகளை 18.01.2023 அன்று மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுற்றார்.

WhatsApp Image 2023 01 17 at 02.47.45

இலங்கைத் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிறப்பு நிகழ்வுகளை நடாத்த மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்கான முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் 17.01.2023 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 01 10 at 03.23.22

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணைப்பாளர் ஏ. ரகுநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 10.01.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 01 12 at 00.45.52

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாகிய தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கற்றல் உபகரணங்கள் 12.01.2023 அன்று தாண்டியடி பாடசாலையில் வைத்து அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

 WhatsApp Image 2023 01 10 at 02.11.34மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தராக திரு கணபதிப்பிள்ளை மதிவண்ணன் அவர்கள் 09.01.2023 அன்று கடமையை பொறுப்பேற்றார்.