GA

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில்  நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்றுவருகின்றது.

WhatsApp Image 2023 01 20 at 01.36.30 2 1

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா  அவர்களை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார அவர்கள் 20.01.2023  அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து  கலந்துரையாடினாா்.

WhatsApp Image 2023 01 19 at 00.00.01

மாவட்ட தேசிய சமாதான பேரவையின் அனுசரனையில் சர்வ மத பேரவையின் ஒழுங்குபடுத்தலில் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் வதிவிட பயிற்சி செயலமர்வு 19.01.2023 அன்று கல்லடி தனியார் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 01 19 at 03.18.44

உள்ளூராட்சித் தேர்தல்  காலத்தில்   பதவி நிலை அதிகாரிகள்  மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பான  விசேட கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஶ்ரீகாந்த்  அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம்.சூபியான்  தலைமையில் மாவட்ட செயலகத்தில்19.01.2023  அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 01 17 at 22.33.48 1

உள்ளூராட்சித் தேர்தல் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரும், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான எம்.வீ.எம்.சூபியான்  தலைமையில் நடைபெற்றது.