- Details
- 16views

மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செலயத்திற்கான நவீன இணைத்தளம் “Smart Secretariat” அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களினால் 30.02.2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 27views

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இவ்வருடத்துடன் ஓய்வு பெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 29.12.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 21views

மாவட்டத்திற்கு போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பது மாவட்ட நிருவாகத்திற்கு அப்பால்பட்ட ஒரு மாபியா வலைப்பின்னலாக உள்ளது என மட்டக்களப்பு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.பெண் குடும்பத் தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரையறைகளை உருவாக்குதல் எனும் ஆய்வின் கொள்கைச் சுருக்க வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
- Details
- 13views

மட்டக்கள்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில் பற்று, மற்றும் போரைதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் 29.12.2022 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
- Details
- 24views

அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா "வாழும்போதே வாழ்த்துவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும், சாதனையாளர்களுக்குமான சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது வழங்கும் விழா 24.12.2022 ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு ஊறணி கிரிபோஜன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.





