WhatsApp Image 2023 07 26 at 13.10.47

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான  பயிற்றுனருக்கான பயிற்சி பாசறை  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர்  ப. தினேஷ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.07.2023 அன்று  இடம் பெற்றது.

WhatsApp Image 2023 07 27 at 08.24.05

இளம் வயதில் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மதுஷிகனுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால்   கௌரவமளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 26.07.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 07 24 at 17.07.21

நாடளாவிய ரீதியில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 15வது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு பணிகளின் ஆரம்ப கட்டச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு தொடர்பான பணியில் ஈடுபடவுள்ள வட்ட உத்தியோகத்தர்களுக்கான (Circle Officer)  பயிற்சிநெறியானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதியினருக்கான மூன்று நாள் செயலமர்வு மாவட்ட புள்ளிவிபரவியலாளரும் உதவித் தொகைமதிப்பு அத்தியட்சகருமாகிய  திரு ரி.ஜெய்தனன் அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு மண்டபத்தில் கடந்த 18.07.2023 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 20.07.2023 வியாழக்கிழமை வரை சிறப்பாக இடம்பெற்றது.

WhatsApp Image 2023 07 25 at 14.05.53

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஜூலை மாதத்திற்கான அபிவிருத்தி  குழு கூட்டம் 25.07.2023 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 07 24 at 15.01.32

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் 24.07.2023 அன்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாண ஆளுநரினால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.