- Details
- 10views

மட்டக்களப்பில் திறன்மிகு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.08.2023 அன்று இடம் பெற்றது.
- Details
- 17views

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் 24.08.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த கால சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததனால் பரவலாக பின்தங்கிய பகுதிகளில் கைவிடப்பட்டும் கவனிப்பாரற்று அழிவுற்ற நிலையிலும் பல சிறிய ஆலயங்கள் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றின் தொன்மைகள் அழிந்து போகா வண்ணம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாட்டிற்குரிய வகையில் அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்ட நிலையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டதனைத் தொடர்ந்து இன்று அவ்வாறு இனங்காணப்பட்ட 4 ஆலயங்களை பராமரிக்கும் பொறுப்பு மாவட்டத்தில் உள்ள வசதி படைத்த ஆலயங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
- Details
- 14views

நாட்டில் அதிகரித்துவரும் இணையவழி குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் 23.08.2023 அன்று இடம்பெற்றது.
- Details
- 11views

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பெண்கள் வலையமைப்புகளுக்கு இடையிலான அனுபவ பகிர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.08.2023 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ௧லாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது.
- Details
- 8views

உலக உணவுத் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, கிரான் மற்றும் ஏனைய பிரதேச மக்களுக்கான நலனுதவித்திட்டங்கள் 21.08.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.





