- Details
- 27views

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன புகை பரீட்சித்தல் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதான மோட்டார் பரிசோதகர் ரி. சிவயோகன் அவர்களின் தலையில் 12.09.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் மாவட்டத்தின் 14 பிரேச செயலக பிரிவில் கடமையாற்றும் சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள், அளவைகள் நிறுவைகள் திணைக்களக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- Details
- 4views

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் நோக்கில் கௌரவ இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பில் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் திரு செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்கள் தலைமையில் தேசிய கல்வி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் 06.09.2023 அன்று இடம் பெற்றது.
- Details
- 3views

காலநிலை மாற்றங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படும் கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிராமங்களை சைல்ட்பண் நிறுவனத்தின் நிதிஉதவியுடன் மேம்படுத்த புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்புதிய திட்டம் ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக துறைசார் நிபுனர்களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த அவர்களின் தலைமையில் 08.09.2023 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
- Details
- 11views

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் 05.09.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.





