WhatsApp Image 2023 09 28 at 20.46.14

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்தும் கடற்கரை கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 28.09.2023 அன்று கல்லடி கடற்கரையில் மிகச்சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற சமூகத்தை உருவாக்கல், கரையோர சுத்தம் பேணல், சுய தொழிலை முன்னேற்றுதல் (உள்ளூர் உற்பத்தியாளர்கள்) ஆகிய சமூக நல இலக்குகளை நோக்கிய பார்வையில்  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு, உள்ளூர் உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவு கூடங்கள் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டதுடன், உணவுக் கூடங்களை அதிதிகள் பார்வையிட்டனர்.

WhatsApp Image 2023 09 27 at 15.05.41

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா பண்டிகையானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலக வளாகத்தில் 27.09.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்  மாவட்டத்தில் சுற்றுலா துறையினை அபிவிருத்தி செய்வதனால் மாவட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு துறையாக இத்துறை காணப்படும் என தெரிவித்தார்.

WhatsApp Image 2023 09 22 at 13.01.44

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  22.09.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 09 27 at 20.15.20 1

32 வருடங்கள் அரச சேவையை பூர்த்தி செய்து அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு 27.09.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வொன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 09 22 at 10.40.33

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர், கமநல சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், வனவிலங்கு திணைக்கள உத்தியோகத்தர்கள், வன பரிபாலன சபை திணைக்கள உத்தியோகத்தர்கள், நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.