WhatsApp Image 2023 12 13 at 14.50.03 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் “காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய நிகழ்ச்சித் திட்டம் (Climate Smart Irrigated Agriculture  Project)” தொடர்பான 7ஆவது மாவட்ட வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல் 13.12.2023 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான உதவித் திட்ட பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

WhatsApp Image 2023 12 13 at 14.50.54

பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி பிள்ளை நேய சூழலை உருவாக்கும் விதத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு  அதிகாரசபையின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாணவர் தூதுவர் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பாடசாலையின் சிரேஸ்ட மாணவ தலைவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களை உள்ளடங்கிய சிறுவர் பாதுகாப்பு மாநாடு 13.12.2013 அன்று மாவட்ட செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு  அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

WhatsApp Image 2023 12 13 at 13.02.45

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி (Marc Andre Franche) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாகவும் இதன்போது குறித்த குழுவினர் அறிந்துகொள்ளும் வண்ணம்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களினால் அளிக்கையொன்று  செய்யப்பட்டது.

WhatsApp Image 2023 12 07 at 16.20.57

மட்டக்களப்பு மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் 07.12.2023 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.