WhatsApp Image 2023 12 28 at 14.59.39

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு 28.12.2023 அன்று செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளீதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஆ. நவேஸ்வரன் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.

WhatsApp Image 2023 12 28 at 13.54.57 1

கடந்த 2023 நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி பெற்ற மட்டக்களப்பு வலய மாணவர்கள் 352 பேருக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளில் கல்லூரியில் 28.12.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 12 27 at 16.35.50 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.12.2023 அன்று இடம்பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். நவலோஜிதன் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார்.

WhatsApp Image 2023 12 27 at 18.40.10

பட்டிருப்பு வலயக்கல்வி  பணிமனையினால் 2023ம்  ஆண்டில் சாதனையாளர்களை பாராட்டும் விழா  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 27.12.2023 அன்று இடம்பெற்றது. வலயக்கல்வி பணிப்பாளர் சீ.சிறிதரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே  முரளீதரன் அவர்கள் கலந்து கொண்டார். பாண்ட் வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன்  நிகழ்வு ஆரம்பமாகியது.