- Details
- 16views

அஸ்வெசும நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் நன்மை பெற தகுதியுடைய, தெரிவு செய்யப்பட்ட மூன்று இலட்சம் வறிய குடும்பங்களை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அதன் ஓர் அங்கமாக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நிகழ்வு 13.07.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 7views

மட்டக்களப்பில் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் முபாரக் அவர்களுக்குமிடையில் நிகழ்நிலையூடாக மாவட்ட செயலகத்தில்11.07.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 19views

ரிதிதென்ன மகாவலி குடியேற்ற கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பாரம்பரிய நிகழ்வான கந்தூரி விழாவின்போது இப்பிரதேச பொதுமக்களுக்கு சமைத்த உணவுகள் பரிமாறப்பட்டன.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மேக்கர் ஸ்பேஸ் நிறுவனத்தினை 09.07.2024 அன்று திறந்து வைத்தார். மேக்கர் ஸ்பேஸ் நிறுவன (Maker Space) பணிப்பாளர் என்.கிசோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்குமாகாண கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க கலந்து கொண்டனர்.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை 09.07.2024 அன்று ஆரம்பித்துவைத்தார். "எமது காலம்" எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக தேவநாயகம் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியில் பயணிக்கும் அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்தும் 4வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





