WhatsApp Image 2024 09 04 at 11.16.45

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஆகியவற்றில்   ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 04.09.2024 அன்று காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகி தபால்மூல வாக்களிப்பு  சுமூகமான நிலையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் உள்ளிட்ட  பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்று வருவதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 290 உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 404 உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

WhatsApp Image 2024 09 03 at 18.01.39 1

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 21 திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் 03.09.2024 ம் திகதி முதல் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக நாடு பூராகவும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2024 08 31 at 14.10.39

மட்டக்களப்பு - திராய்மடு சிமிர்னா திருச்சபையின் தலைமை போதகர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 10 கிராமங்களை உள்ளடக்கிய வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற 5 வயது தொடக்கம் பல்கலைக்கழகம் செல்லும் சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கி அவர்களின் அறிவாற்றல், சமூக ரீதியான ஆற்றல், உடல் ரீதியான ஆற்றல் மற்றும் ஆன்மீக ரீதியான ஆற்றல் என்பவற்றில் சிறந்தவர்களாக இவர்களை  மாற்றும் நோக்கிலேயே இத்திட்டமானது அமையப்பெறவுள்ளது. இத்திட்டமானது சிறார்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.146 சிறுவர்கள் இத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்காக இத்திட்டமானது 18 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

WhatsApp Image 2024 09 03 at 10.42.31

ஜனாதிபதித் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.09.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 08 31 at 14.16.44

ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 31.08.2024 அன்று  இடம்பெற்றது.