WhatsApp Image 2024 08 31 at 14.16.44

ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 31.08.2024 அன்று  இடம்பெற்றது.

WhatsApp Image 2024 08 23 at 10.17.54

எதிர்வரும் செப்டம்பர் 21ஆந் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் 449606 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 08 21 at 11.14.03 1

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான திகதியானது தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்ய தேர்தல் திணைக்களத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

WhatsApp Image 2024 08 22 at 22.38.28

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளமானது மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவால் வடிவமைப்பு செய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் தலைமையில் 22.08.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 08 13 at 10.28.28 1

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகைமொழி பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 13.08.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி நெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பொது நிர்வாக அமைச்சின் நிதி அனுசரனையில்  மூன்றுமாத காலத்தை உள்ளடக்கியது. இப்பயிற்சி நெறியானது மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு  வழங்கப்படவுள்ளது.