WhatsApp Image 2024 08 07 at 11.54.29 1

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றுகூடலானது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் கலாநிதி அஜித் ரோகன அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

WhatsApp Image 2024 08 06 at 13.03.07

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தினுடாக  கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உள்ளீடுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 07 19 at 12.22.43 1

தாய்லாந்து நாட்டில் இடம்பெறவுள்ள ஆசிய ஆடவர்  மல்யுத்த செம்பியன் சிப் போட்டியில் மட்டக்களப்பு  சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிபிரசாத் பங்குபற்றவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மாணவனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அத்துடன்  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சிவானந்தா தேசிய பாடசாலையில்  உயர்தரத்தில்  இறுதி ஆண்டில் கல்வி பயிலும்  மாணவன் கிருஷ்ணகுமார் ஹரிபிரசாத் மாணவனுக்கு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஶ்ரீகாந்த் ,உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் மற்றும் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

WhatsApp Image 2024 07 29 at 11.57.40

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு World vision Lanka நிறுவனத்தினால் கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கதிரைகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ரேகா நிருபனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின் போது 59 ஆயிரம் பெறுமதிமிக்க 30 பிளாஸ்ரிக் கதிரைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு world vision Lanka நிறுவனத்தின் பணிப்பாளர்  அ.ரவீந்திரனினால் வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 07 19 at 05.54.45

விவசாயத்தை  தொழில்நுட்பத்தின் ஊடாக நவீனமயப்படுத்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தலுக்கு  வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் தொடர்பான  விவசாயிகளுடனான  கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்  அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக  விவசாயத்தை  நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் உதவி  வங்கிகள் ஊடாக வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.