- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள், தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் 30.10.2024 அன்று காலை 8.30 மணி முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகி சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
- Details
- 4views

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.
- Details
- 4views

மகளிர், சிறுவர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு இளைஞர் சேவை மன்றத்தினால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கும் சாதனையாளர் கெளரவிப்பும் 26.10.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் நிசாந்தி அருண்மொழி அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜீ.சஜீவ் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.10.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன் அவர்களிடம் 23.10.2024 அன்று கையளிக்கப்பட்டன.





