WhatsApp Image 2024 12 08 at 07.40.30

மாவட்ட செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் பாராட்டு விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 07.12.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா  முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாரம்பரிய முறையில் மங்கல விளக்கேற்றி தமிழ் தாய் வாழ்த்துப்பாடி இந்நிகழ்வு ஆரம்பமாகியது. இதன் போது பாடல் இசைத்தல், இலக்கிய விமர்சனம், சிறுகதையாக்கம், பேச்சு, நடனம், கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் கௌரவிப்புகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 12 07 at 11.41.03

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் லயன்ஸ் கழக பிரதிநிதிளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்குவதற்கான ஒரு தொகை நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் கழகங்கள் இணைந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைத்துள்ளனர்.

WhatsApp Image 2024 12 05 at 11.07.07

மட்டக்களப்பில் ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம் எனும் தொனிப்பொருளில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 05.12.2024 அன்று இடம்பெற்றது. முதியோர்களுக்கான  தேசிய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன்  மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து முதியோர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு இடம்பெற்றது.

WhatsApp Image 2024 12 07 at 11.01.20 1

சிமிர்னா  திருச்சபையின் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்   சின்ன ஊறணி, சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, நாவற்கேணி, சுவிஸ் கிராமம், கிராய்மடு, அமிர்தகழி மட்டிக்களி, கருவேப்பங்கேணி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள  பயனாளிகளுக்கான  சிறுவர்களின் குடும்பங்களுக்கு சுமார் 10 ஆயிரம் பெறுமதியான  உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது. சிமிர்னா  திருச்சபையின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் இயக்குனருமான அருட்பணி  எஸ்.வசந்தகுமார்  அவர்களின் தலைமையில், அதன் திட்ட முகாமையாளர் செல்வி.அமலதாஸ் கேமினி அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

WhatsApp Image 2024 12 04 at 11.40.43 1

மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகளை தொடர்பான செயலமர்வு கல்லடி தனியார் விடுதியில் 04.12.2024 அன்று இடம்பெற்றது. செர்ட் (CERT) நிறுவன  திட்ட முகாமையாளர் திலின திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.