- Details
- 11views

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 17.12.2024 அன்று இடம்பெற்றது. மனித உரிமைகள் பிராந்திய காரியாலய இணைப்பாளர் எ.எல். இஸ்சதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டார்.
- Details
- 11views

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு 17.12.2024 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்கள் அவர்களது உரிமைகளை அறிந்து கொண்டு அவர்களே அவர்களை உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னாமுனை மியாமி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மூன்று நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்துள்ளார்.
- Details
- 12views

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை தடுத்தல் மற்றும் பாதிப்பை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் ஏற்பாட்டில் சர்வோதயா மண்டபத்தில் 12.12.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 11views

மட்டக்களப்பில் சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தின நிகழ்வானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிகரதாமோதரன் பணிப்பாளர் தலைமையில் கல்லடி தனியார் விடுதியில் 14.12.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
- Details
- 5views

மட்டக்களப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு ஒல்லாந்தர் கோட்டையை பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 12.12.2024 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தின் புராதன சுற்றுலா தளங்களில் ஒன்றான ஒல்லாந்தர் கோட்டையினைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தேவையான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.





