WhatsApp Image 2025 01 21 at 18.57.35

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான  நவீன தையல் இயந்திரம்    மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் 21.01.2025 அன்று வழங்கிவைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கிருந்து மீண்டும் 2023 ஆம் ஆண்டு நாடு திரும்பி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு இலங்கை அகதிகள் புணர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் ஒப்பர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உதவியுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மற்றும் நவீன தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 01 22 at 12.21.47

மட்டக்களப்பில் உணவு உரிமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை  கையளிக்கப்பட்டது. பியன் (FIAN) நிறுவனத்தின் உணவு உரிமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கையானது பியன் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் எஸ்.விஸ்வலிங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டத்தில்  வீட்டு உணவு பாதுகாப்பின்மை மற்றும் உணவு முறைகளை 20  பிரதேச செயலக பிரிவுகளில் ஆறுமாத காலம் மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கை வை.எம்.சி. ஏ மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

WhatsApp Image 2025 01 21 at 15.38.53

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று களஆய்வை மேற்கொண்டார். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கொம்மாதுரை விநாயர் வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில்  உள்ளவர்களை பார்வையிட்டார்.

WhatsApp Image 2025 01 21 at 15.38.53

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று களஆய்வை மேற்கொண்டார். செங்கலடி பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கொம்மாதுரை விநாயர் வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில்  உள்ளவர்களை பார்வையிட்டார்.

WhatsApp Image 2025 01 21 at 15.50.13 1

புதிய அரசாங்கத்தினால்  நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து  நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மூன்றாம் கட்டமாக  கீளின் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் பழைய  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.01.2025 அன்று இடம்பெற்றது.