WhatsApp Image 2025 02 14 at 11.33.21

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனோகரி உளநல சமூக நிகழ்ச்சி திட்டத்தை இவ்வருடமும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த மனோஹரி உளநல சமூக நிகழ்ச்சி திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட  வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் 14.02.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 02 13 at 17.58.11 1

மட்டக்களப்பில்  வறுமைக்குள்ளாகியுள்ள முதியோர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் தலைமையில் ஒரு பானை நிதியத்தின் உயர் அதிகாரிகளுடன் பழைய மாவட்ட செயலகத்தில் 13.02.2025 அன்று இடம்பெற்றது. ஒரு பானை நிதியத்தின் பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்ட  முதியோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு  தெரிவு செய்யப்பட்ட பிரதேச  செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் முதியோர்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 13.02.2025 அன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் சில முக்கிய பிரச்சினைகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை  ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் உரிய அதிகாரிகளின் மூலம் தீர்த்து வைப்பதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

WhatsApp Image 2025 02 13 at 17.56.32

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் உள்ள 21 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 13.02.2025 அன்று இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில்  கீளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் 16.02.2025 அன்று காலை 7.00 மணிக்கு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 02 12 at 21.05.07 1

புதிய அரசாங்கத்தினால்  நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து  நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பாக மாவட்டத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.