- Details
- 6views

சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளீரை வலுப்படுத்தும் நோக்கில் "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக - அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் சுற்றுப் போட்டி 06.03.2025 அன்று மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 11views

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பாசறை நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 05.03.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 10views

மட்டக்களப்பில் கடந்த 10 ஆண்டுகளாக மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வரும் தொண்டு நிறுவனமான LIFT நிறுவனமானது 03.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இரண்டு முறையான புலம்பெயர்வு பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகங்களை நடாத்தி, மக்களுக்காக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் தெளிவை வழங்கியுள்ளது.
- Details
- 8views

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 05.03.2025 அன்று இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் காணப்படும் குளங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்து வேலைத்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
- Details
- 8views

நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டை அணிதிரட்டுதல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 25.02.2025 அன்று இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டை அணிதிரட்டுதல் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இனரீதியான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.





