WhatsApp Image 2025 03 25 at 10.21.55

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  பிரதம உள்ளக கணக்காய்வாளர்  ஏ.எஸ்.சசிகரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.03.2025 அன்று  இடம்பெற்றது. இதன்போது  மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள்  கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும்   ஆராயப்பட்டது.

WhatsApp Image 2025 03 23 at 08.43.03

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு  காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.03.2025 அன்று நடைபெற்றது. அகில இலங்கை சமாதான நீதவானும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகிய "சாமஸ்ரீ தேசமான்ய" உ. உதயகாந்த் (JP) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான  திருமதி.ஜஸ்டினா யுலேகா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

WhatsApp Image 2025 03 21 at 13.22.14

மட்டக்களப்பு மாவட்டத்தில்  நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 21.03.2025 அன்று இடம்பெற்றது. மாவட்ட செயலகம் மற்றும் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில்   கொமர்சல் வங்கியின் அனுசரனையில்  மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தினை  நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 03 25 at 07.29.23

மட்டக்களப்பில் முன்பள்ளி சிறார்களினால் வரையப்பட்ட ஓவிய கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 24.03.2025 அன்று இடம்பெற்றது.கீளின் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ்  மாவட்டசெயலக  முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு மற்றும் கலாசார பிரிவும் ஒருங்கிணைந்த ஏற்ப்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்பள்ளி சிறார்களின் கற்பனை ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக இந்நிகழ்வு புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

WhatsApp Image 2025 03 17 at 11.29.27

மட்டு அரசாங்க அதிபரிடம் 250 வருடம் பழைமையான யப்பானிய ஓவியம் கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள சமூக ஆய்வு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 17.03.2025 அன்று  இடம்பெற்றது. அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உளவளத்துனை அணுகுமுறை மற்றும் உள சமூக செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மற்றும் யப்பான் நாட்டு அனுகுமுறையையுடன்  ஒப்பிட்டு ஆய்வு முறையை  டோக்கியோ பல்கலைக்கழக  பேராசிரியர் மிச்சிகோ ஸ்கிக் அவா   மேற்கொண்டார்.