- Details
- 5views

“பாதுகாப்பான, முறையான மற்றும் சட்டரீதியான புலம்பெயர்வை உறுதிசெய்தல்” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் ஆரம்ப நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 5views

“பாதுகாப்பான, முறையான மற்றும் சட்டரீதியான புலம்பெயர்வை உறுதிசெய்தல்” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் ஆரம்ப நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 7views

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன 11.03.2025 அன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட பலரும் இணைந்து களவிஜயம் மேற்கொண்டனர். மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள குறைநிறைகளை வர்த்தகர்களிடமும், அப்பகுதி விவசாயிகளிடமும் கேட்டறிந்து கொண்டார். கிராமிய பொருளாதார அமைச்சினால் 300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குறித்த பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆண்டு இறுதிப்பகுதியில் முடிவுறுத்தப்பட்டு அது மக்கள் பாவனைக்கு விடப்படாமல் இருந்து வந்த நிலையில் அண்மையில் தற்போதைய அரசாங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Details
- 13views

சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினரும், வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினரும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளீரை வலுப்படுத்தும் நோக்கில் "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக - அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் சுற்றுப் போட்டி 06.03.2025 அன்று மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்த போட்டி நிகழ்வின் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள், நினைச்சின்னம் மற்றும் பணப் பரிசில்கள் என்பவற்றையும் வழங்கி வைத்தார்.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான களஞ்சிய முகாமைத்தும் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் 10.03.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட செயலக மற்றும் 14 பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு களஞ்சிய முகாமைத்துவம் தொடர்பான அறிவாண்மையை மேம்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.





