WhatsApp Image 2025 04 24 at 09.37.01

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிப்பானது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும்,மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரினா முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.

WhatsApp Image 2025 04 24 at 09.37.01

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிப்பானது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும்,மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரினா முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.

WhatsApp Image 2025 04 21 at 17.02.18

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில்  கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை  செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.04.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 04 22 at 17.26.58

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்  மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலானது  மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.04.2025 அன்று இடம்பெற்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய  விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2025 04 17 at 12.24.12 1

மட்டக்களப்பில்  2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட சிறுவர் சபைக்கான கூட்டமானது  மாவட்ட சிறுவர் சபை தலைவர் சி.தேவருபன் தலைமையில்  புதிய மாவட்ட செயலகத்தில் 17.04.2025 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம  அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அராங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பிரதேச சிறுவர் சபைகளை பலப்படுத்தும் நோக்கில் அதற்கு நிதி உதவிகளை வழங்கி அவர்களை நிதியை கையாளுவதன் ஊடாக எதிர்காலத்தில் லஞ்ச ஊழலற்ற சிறந்த சமுதாயத்தை  உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.