WhatsApp Image 2025 06 03 at 14.05.50

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர்  தகவல் மைய நிலையம் தொடர்பான  கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  03.06.2025 அன்று பழைய  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் 50 அரச அதிகாரிகளை பயிற்றுவித்து அவர்கள் மூலம் 5000 மக்களுக்கான  விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இச்செயற்திட்டங்கள்   தொடர்பான  தெளிவூட்டல்கள்  இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்திலிருந்து பாதுகாப்பான முறையில் மற்றும் சட்டரீதியான புலம்பெயர்வை உறுதிசெய்வதற்காக  புலம்பெயர் தகவல் மையம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற செயலமர்வினை சமூகப் பாதுகாப்பு நிபுணர் கே.விமலநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த், சமூகப் பாதுகாப்பு செயற்றிட்ட நிபுணர்களான உப்புல் விறாமனகே, அமில பிறியங்க ஆகியோர் கலந்து கொண்டு மன குறைகளை தீர்ப்பது தொடர்பான செயலமர்வினை நடாத்தியிருந்தனர்.

WhatsApp Image 2025 05 22 at 10.22.08

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.05.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 05 22 at 10.22.08

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.05.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 05 16 at 11.59.00

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் மனித உரிமை மற்றும் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள்  மகஜர் ஒன்றினை  16.05.2025 அன்று கையளித்தனர். பாடசாலை மாணவி அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு பிள்ளைக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக துரித சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட மகஜர் அரசாங்க அதிபரிடம்   வழங்கப்பட்டது.