- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வர்ண ஐயசுந்தர ஆகிய இருவரும் கலந்து கொண்டு மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகளை அரச அதிகாரிகளுக்கு முன்வைத்ததுடன், கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களங்களின் அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்ட சமூக நல செயற்பாடுகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு புற்றுநோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு 25.06.2025 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 12views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.06.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டற் செயலமர்வொன்று 24.06.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜெஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
- Details
- 8views

"கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது 21.06.2025 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது. 615 மீட்டர் நீளம் கொண்ட இந்த வீதியானது 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாத செயற்பாடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.





