WhatsApp Image 2025 06 09 at 12.21.56 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினை குறைத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலதத்தில் 09.06.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 06 11 at 15.18.51 1

மாவட்டத்தில் ஒருங்கிணப்புக்குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில்  மாவட்டத்தின்   ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 11.06.2025 அன்று இடம்பெற்றது.

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் 05.06.2025 அன்று இடம்பெற்றது.பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்டு நாட;ளாவிய ரீதியில்  பல நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

WhatsApp Image 2025 06 09 at 13.18.29

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் கிறிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வருடாந்தம் இலங்கை கிறிக்கட் சபையின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் கௌரவிப்பு விழா இம்முறை மட்டக்களப்பு மாவட்ட கிறிக்கட் சபையின் தலைவர் எந்திரி என்.டீ.ரஞ்சன் தலைமையில் மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் விடுதியில் 08.06.2025 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

WhatsApp Image 2025 06 04 at 19.39.40

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நிறைவேற்றுத் தர மற்றும் தெரிவு செய்யப்பட்ட அரச அலுவலகங்களுக்கான இலஞ்ச ஊழல் தடுப்பு நிவாரணம் மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவுகளின் அறிமுக பயிற்சி 04.06.2025 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு வளவாளராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் (சட்டம்) சப்றீ சல்டீன் கலந்து கொண்டார்.