WhatsApp Image 2025 05 14 at 15.52.45 1

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வெசாக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 14.05.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 05 14 at 15.49.11 1

மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமானி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பாசறை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமானி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியானது  மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

voting

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025  மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர், காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் பற்று, கோறளை பற்று , கோறளை பற்று மேற்கு, கோறளை பற்று வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய 9 பிரதேச சபைகளுக்கான 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் 06.05.2025 அன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அமைதியான முறையில்  இடம்பெற்று பிற்பகல் 04.00 மணியுடன்  நிறைவடைந்தது.

WhatsApp Image 2025 05 14 at 10.30.17

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு  மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மங்கலராமய விகாரையில் இன மத பேதமின்றி அனைவரின் பங்கேற்புடன் வெசாக் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. இதன்போது மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  உள்ள வெசாக் அலங்கார தோரணம் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 05 03 at 11.05.10

49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மாவட்ட மட்ட கரம் விளையாட்டுப்போட்டிகளானது  மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயக்குமார் தலைமையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் 03.05.2025 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி) கலந்து கொண்டார்.