- Details
- 10views

மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.05.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள், மேம்படுத்த வேண்டிய பயிர்ச்செய்கை நிலங்கள், கைவிடப்பட்ட காணிகளை அடையாளப்படுத்துவதுடன் எதிர்கால மாவட்ட அபிவிருத்திக்கு திட்டங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் இடம்பெறவுள்ளன.
- Details
- 4views

விவசாய நவீனமயமாக்கல் கிராம திட்டத்தின் நெல் நாற்று நடவு விழாவும் விழிப்புணர்வு நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது. நெற்செய்கையில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்புணர்வூட்டல் மற்றும் இயந்திர முறையிலான நாற்று நடுகையினை மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கோடு குறித்த விழிப்புணர்வூட்டும் நிகழ்வு 29.04.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம்.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
- Details
- 3views

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.04.2025 அன்று இடம்பெற்றது.
- Details
- 7views

உள்ளூராட்சிமன்ற தேர்தல் 2025 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 210 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிமீறல் அடிப்படையில் சாதாரணதரமுடையவை எனவும், அநேகமான முறைப்பாடுகள் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- Details
- 10views

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் கடமைகளில் கடமையாற்றவுள்ள வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.04.2025 அன்று இடம்பெற்றது.





