WhatsApp Image 2025 06 19 at 12.09.18

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் 19.06.2025 அன்று இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் எண்ணக்கருவில் உதித்த  டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஒர் அங்கமாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலமாக சுகாதாரம் மற்றும் விவசாயம் சார் திணைக்களங்களின் கீழ் பணியாற்றும்  அனைத்து  உத்தியோகத்தர்களின் தரவுகளை "டயஸ் வோர்ட் " எனும் செயலி மூலம் பதிவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தல் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.

WhatsApp Image 2025 06 19 at 11.09.44

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க “மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது – இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்” எனும் கருப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் 19.06.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 06 18 at 10.56.57 1

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  பிரதம உள்ளக கணக்காய்வாளர்  ஏ.எஸ்.சசிகரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.06.2025 அன்று  இடம்பெற்றது. இதன்போது  மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும்  ஆராயப்பட்டது.

WhatsApp Image 2025 06 18 at 12.37.16

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடன்  விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் புத்திக்க ஹேவவசம் அவர்களின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் 18.06.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவில் உள்ள தனித்துவமான சுற்றுலாத்தலங்களை  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு  நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2025 06 17 at 13.22.51 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதிகளில் வசித்து வரும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான காப்பக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான "பெக்கர்ஸ் ப்ரீ மட்டக்களப்பு" (Beggers free Batticaloa) திட்டம் தொடர்பான  கலந்துரையாடல் 17.06.2025 அன்று  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.