- Details
- 3views

மட்டக்களப்பு - கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பூங்கா நிலையத்திற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன விஜயம் ஒன்றினை மேற்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், அமைச்சின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- Details
- 6views

- 7views

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது A தர சித்திகளைப் பெற்றுள்ளார். பிறந்து 26 நாட்கள் கடந்த நிலையில் எம்பு நேயினால் பாதிக்கப்பட்டு உபாதைக்குள்ளான லக்ஷ்மன் லியோன்சன் இதற்கு முன்னர் நான்கு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பல இன்னல்களின் மத்தியில் குறித்த சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
- Details
- 14views

மட்டக்களப்பில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 17.07.2025 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இடம் பெறும் Batticaloa Expo 2025 கண்காட்சியானது 17.07.2025 அன்று முதல் 20.07.2025 வரையான நான்கு நாட்கள் இடம்பெறுவதுடன், இதில் தொழில் சார் கண்காட்சி மட்டுமல்லாது சிறுவர்களுக்கான mega carnival உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
- Details
- 2views

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.07.2025 அன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 'சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு – விளையாட்டுக்கும் இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.