- Details
- 3views

2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் வைத்தியகலாநிதி கௌரவ ஜகத் விக்கிரமரத்ன 27.07.2025 அன்று வழங்கி வைத்தார். ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
- Details
- 7views

கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலக மட்டங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் விசேட பயிற்சி நிகழ்வானது ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அன்று 26.07.2025 இடம் பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை கிராம மட்டத்திற்கு பரவலாக்கும் செயற்றிட்டம் தொடர்பான விசேட பயிற்சிகள் அதிகாரிகளுக்கு வழக்கி வைக்கப்பட்டன.
- Details
- 8views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கி அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 25.07.2025 அன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பில் முறையான வகையில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்குவதற்கான உயர் மட்ட குழுவின் கலந்துரையாடல்
- Details
- 1views

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் கணியவள மணல் அகழ்வுகளுக்கான அனுமதியினை சரியானதொரு பொறிமுறையின் கீழ் வழங்குவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலானது, மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.07.2025 திகதி இடம் பெற்றது.





