WhatsApp Image 2025 07 25 at 12.47.11 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் கணியவள மணல் அகழ்வுகளுக்கான அனுமதியினை சரியானதொரு பொறிமுறையின் கீழ் வழங்குவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலானது, மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.07.2025 திகதி இடம் பெற்றது.

WhatsApp Image 2025 07 23 at 16.16.42 1

சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்படுத்திட்டம் - 2025 தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீளாய்வு கலந்துரையாடல் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தியிருந்தார்.

 

WhatsApp Image 2025 07 23 at 19.32.16

மட்டக்களப்பு  மாவட்டத்தில் மனித-யானை மோதலை தடுப்பதற்கான   முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.07.2025 அன்று இடம் பெற்றது. மாவட்டத்தில் நிலவும் மனித-யானை மோதலை தவிர்ப்பதற்கான  உபாயமுறைகள் குறித்து முகாமைத்துவ குழுவில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2025 07 23 at 17.53.26

மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல்  முகாமைத்துவ  கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.07.2025 அன்று இடம் பெற்றது. மாவட்டத்தில் திண்மக்கழிவகற்றல் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் சவால்கள் தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

WhatsApp Image 2025 07 23 at 19.43.34 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி ஜஸ்டீனா முரளிதரன் அவர்களின் தலைமையில் அன்று (23.07.2025) திகதி இடம் பெற்றது.