WhatsApp Image 2025 08 26 at 16.37.02

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பட்டியல் படுத்தப்படாத கம்பனிகளின் செயல்பாட்டு மற்றும் கண்காணிப்புக் தொடர்பான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 26.08.2025 ம் திகதி நடைபெற்றது. உலக வங்கியின் 89,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவியின் கீழ் விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட விவசாய நவீன மயமாக்கல் திட்டம் விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் விவசாயிகளை தமது விவசாயத்தில் ஸ்திரத்தன்மையுடன் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

WhatsApp Image 2025 08 26 at 16.43.43 2

இலங்கை பவளப்பாறை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயற்கை வளமாகிய பவளப்பாறைகளை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புனர்வுகளை அரச அதிகாரிகளுகன்கு தெழிவுபடுத்தும் விசேட செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் 26.08.2025 ம் திகதி சர்வோதய வளாகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 08 22 at 14.39.25 2

மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தில் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விற்பனையும் கண்காட்சி மட்டக்களப்பில் இடம்பெற்றது. 'இயலாமை என்பது இயலாமை அல்ல வாரீர் எம் சிறப்பு திறன் பிள்ளைகளின் செயல்களைப் பாரீர் ஊக்கப்படுத்துவீர் என்னும் கருப்பொருளில் மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் அதிபர் எம்.ஏ.பரீஸ்கரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

WhatsApp Image 2025 08 22 at 16.01.56

நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று 23.08.2025 ம் திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 08 21 at 16.19.33

அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பங்குதாரர்களுடன் நடாத்தப்படவுள்ள பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.