1

அதிமேதகு ஜனாதிபதியின் அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த  'கிளீன் ஸ்ரீ லங்கா  தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  'மகிழ்ச்சியான நாடு  கிராமம் தோறும்' எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து தொழில் வழிகாட்டல்   நடமாடும் சேவை  12.12.2025 அன்று இடம் பெற்றது.

1

அரசின் 'கிளீன் ஸ்ரீ லங்கா - ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு' நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்இ கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை  மற்றும் விஷேட பொதுமக்கள் சேவைத் திட்டங்களை செயற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் 11.12.2025 அன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 12 08 at 12.03.08மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் லேபில் இடல் தொடர்பான பயிற்சி நெறியானது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பிரதிபணிப்பாளர் பி.எம்.எம். சமீம் தலைமையில்  ஏற்றுமதி அபிவிருத்திசபை பதில் பணிப்பாளர் டி.எம்.பி. திசாநாயக்க பங்குபற்றுதலுடன் சர்வோதயா மண்டபத்தில் (08) இடம்பெற்றது. மாவட்டத்தின் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர் ஏ.பிரபு ஏற்பாட்டில் கொழும்பு மிற்சிற்டி ரொட்டரி கழகத்தின் அனுசரணையில் இவ் பயிற்சி நெறி இடம் பெற்றன.

WhatsApp Image 2025 12 08 at 22.55.57

மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 08.12.2025 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2025 12 07 at 07.09.51மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் 07 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் சேர்க்கப்பட்ட 2ம் கட்ட நிவாரணப்பணியே ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் புதிய மாவட்ட செயலகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.