WhatsApp Image 2025 12 05 at 15.49.16

அரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் 2ம் கட்ட நிவாரணப்பணி ஞாயிறன்று சென்றடையும். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் ஞாயிற்றுக் கிழமை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. மாவட்ட செயலகத்தின் மேற்கொண்டுள்ள நிவாரணப்பணியின் இரண்டாம் கட்டமே மலையக மக்களுக்கான நிவாரணப் பணியாக இடம்பெறவுள்ளது.

WhatsApp Image 2025 11 20 at 10.33.50 AM

தொற்றாநோய்கள் தொற்று நோய்களை விட அதிகமான வேகத்தில் வியாபித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்நோய்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு 11.11.2025 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டுதலில் நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணனின்   ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விளிப்பூட்டும் நிகழ்வில், தொற்றா நோய்களின் வகைகள், தொற்றா நோய்களும் எமது உணவுப் பழக்க வழக்கங்களும், அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகள், தொற்றா நோய்களுக்கான மாத்திரைப் பயன்பாட்டு விடயத்தில் செலுத்த வேண்டிய கவனம் போன்ற விடயங்கள் தொடர்பான மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவுபடுத்தினர்.

WhatsApp Image 2025 11 20 at 10.45.00 AM

மட்டக்களப்பு மாவட்டத்தில் போசாக்கிற்கான பல்துறை சார் செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்தரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.ஹில்மாதஹாநாயக்க பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.11.2025 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2025 11 20 at 10.34.17 AM

மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய  மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது. பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  நிகழ்வை சிறப்பித்ததுடன்இ சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

WhatsApp Image 2025 11 20 at 10.37.04 AM

தேசிய ரீதியில் இடம் பெற்ற சித்துவிலி சித்தம்  ஓவியம், சுவர்ஒட்டி, கார்ட்டூன் போட்டியில்  தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின்  தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி நிஷா றியாஸ் ஒழுங்கமைப்பில் விருது மற்றும் சான்றிதழ்கள் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.11.2025ம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.