- Details
- 22views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண இன்று (01.01.2026) புதிய மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
- Details
- 11views

மட்டக்களப்பில் மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 18.12.2025 ம் திகதி இடம் பெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 607 கருத்திட்டங்கள் ஊடாக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
- Details
- 7views

அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை 16.12.2025ம் திகதி இடம் பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.12.2025 ம் திகதி இடம் பெற்றது.
- Details
- 13views

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ . பிரணவன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தில் 14.12.2025ம் திகதி ஞாயிற்றுகிழமை சிறப்பாக இடம்பெற்றது.





