1

மாற்றுத் திறனாளிகளின் தேசிய கொள்கைப் புதுப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில்  உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன்  மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஸ்வரன் ஏற்பாட்டில்  மாற்று திறனாளி அமைப்புக்களின் ஐக்கிய முன்னனி செயலாளர் பிரசன்ன குருப்பு பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் 17.02.2026 ம் திகதி  இடம் பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான  இழப்பீடு  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி அவர்களின் தலைமையில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில்  13.02.2026 ம் திகதி இடம் பெற்றன. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம். சுல்பிஹார் அபூபக்கர் கலந்து கொண்டனர்.

1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் புதிய மாவட்ட செயலகத்தில் 07.02.2026 ம் திகதி மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி ஓய்வுபெற்ற மற்றும் வேறு அரச திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று கடமைகளை ஆற்றிவருகின்ற சிரேஸ்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிச்சங்க போசகரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட செயற்பாட்டுக்குழுக் கூட்டமானது  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. கே.சந்திரகலா ஒருங்கிணைப்பில் புதிய மாவட்ட செயலகத்தில் 10.02.2026 ம் திகதி இடம் பெற்றது.

1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரிகளுக்கான நிர்வாகத்தில் மனித விழுமியங்கள் தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 06.02.2026 ம் திகதி இடம் பெற்றது.  திருகோணமலை மாவட்ட ஓய்வு நிலை மேலதிக அரசாங்க அதிபர் என்.புவனேந்திரன் அவர்களினால் சிறந்த மனித விழுமியங்களை வளர்த்துக்கொள்வதனூடாக பொதுமக்களுக்கு
கண்ணியமான அரச சேவையினை வழங்குவதல் தொடர்பாக வளவான்மை மேற்கொண்டார்.