- Details
- 5views

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள 16 மீனவ சங்கத்தினருக்கு 26.9 மில்லியன் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை 11.03.2026 அன்று பழைய மாவட்ட செயலத்தில் வழங்கி வைத்தார்.
- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.03.2026 அன்று இடம் பெற்றது.
- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.03.2026 அன்று மாலை இடம் பெற்றது.
- Details
- 4views

கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நடைமுறைப்படுத்தும் கிராமிய பொருளாதார மீள் திறன், நிலைத்தன்மை மற்றும் சுபீட்சத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஒன்றிணைந்த கிராமிய நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை, மீள் திறன் கருத்திட்டத்தினை (IRDCRP) மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் இன்று இடம் பெற்றது.
- Details
- 4views

மட்டக்களப்பில் மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகங்களுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக : மாநாட்டு மண்டபத்தில் 03.03.2026 அன்று இடம் பெற்றது.





