- Details
- 5views
17 வயதுக்குட்பட்ட ஆசிய மல்யுத்தப் சம்பியன் ஷிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டவன் வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தின் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி யோகேந்திர குமார் தவிசாலினி வியட்நாம் நாட்டில் இம்மாதம் 27.05.2026ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய மல்யுத்த சம்பியன் ஷிப் போட்டியில் 69 - 73 கிலோ பிரிவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தினூடாக பாடசாலைகளில் நவீன முறையில் சமயலறைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத்திட்ட ஒத்துழைப்புகான கூட்டாண்மை செயலகத்திற்கான பணிப்பாளர் நாயகம் ஆர்.ரூசாந்தன் அவர்களின் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் 11.05.2026 அன்று இடம் பெற்றன.
- Details
- 5views
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் வர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் 27.04.2026 அன்று இடம் பெற்றது.இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சொனியா டக்லஸ் மாவட்டத்திற்கு முதல் முறையாக விஜயம் ஒன்றை மேற்கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டார்.
- Details
- 4views
மட்டக்களப்பு மாவட்ட வறட்சி முன்னாயத்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.04.2026அன்று இடம்பெற்றது. காலநிலை மாற்றத்தினால் வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் அதிக பாதிப்புக்களை ஏதிர்நோக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.





